×

பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: யானை மீது சந்தனக்குட பவனி

குளச்சல்: குமரியில் பிரசித்திபெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண்கள் இரு முடி கட்டி வந்து அம்மனை வழிபடுகின்றனர். இதனால் பெண்களின் சபரிமலை என்று இந்த கோயில் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் மாசிக்கொடை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கொடியேற்றத்துடன்  தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. இதற்கிடையே 3ம் நாள் கொடையை முன்னிட்டு நேற்று  காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபி ஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

மதியம் 1மணிக்கு உச்ச பூஜை நடந்தது. மாலை 6.15 மணிக்கு கீழ்கரை பிடாகை சடையப்பர் கண்டன் சாஸ்தா கோயிலிலிருந்து யானை மீது சந்தனக்குடம் பவனி, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு கதகளி,9 மணிக்கு அத்தாழ பூஜை,9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல் ஆகியவை நடந்தது. 4 ம் நாள் விழாவான இன்று புதன்கிழமை காலை மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், நண்பகல் 12.30 மணிக்கு வெட்டுமடை இசக்கியம்மன் கோயிலிலிருந்து சந்தனக் குட பவனி நடந்தது.

மாலை 3 மணிக்கு மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோயிலிலிருந்து சந்தனக்குடத்துடன் யானை ஊர்வலம், 3.30 மணிக்கு கொத்தனார்விளை விடாலமுத்து சிவன் கோயிலிலிருந்து யானை மீது களப பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோயில் வந்தடைகிறது. மாசிக்கொடையின் முக்கிய வழிபாடான வலியபடுக்கை பூஜை வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடக்கிறது. 9 ம் நாள் இரவு மற்றொரு முக்கிய வழிபாடான  பெரிய சக்கர தீவெட்டி பவனி நடக்கிறது. 10 ம் நாள் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Bhagavathyamman Temple Moskikodai Ceremony ,Sandanakkuda Bhavani on Elephant ,Masikkodi Festival ,Bhagavathyamman Temple , Bhagavathyamman Temple, Masikkodi Festival, Elephant
× RELATED உடுமலை திருமூர்த்திமலை கோவிலை...